முதல் பக்கம் தொடர்புக்கு

 

 

 


மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை

  கொட்டகை வடிவமைப்பு

பண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல்
  • மாடுகளின் உடல் நலத்தை முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் முறையான கொட்டகை அமைப்பு மிகவும் அவசியமாகும். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் பேணப்பட்டால் மட்டுமே அவை தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை வெளிப்படுத்த முடியும்.
  • பண்ணைக் கட்டிடங்களை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும். பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்கப்படவேண்டியவை.
மண்
  • நல்ல வலுவான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத் தேர்ந்தெடுக்கும் இடத்தின் மண் இருக்கவேண்டும்.
  • களிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.
  • கடினமான மண் கொண்ட இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.
பண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி
  • பண்ணைக் கட்டிடங்கள் அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு இடம் இருக்கவேண்டும். இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.
  • 200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது நிலம் இருக்கவேண்டும்.
  • தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.
வடிகால் அமைப்பு
  • மழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும் தடுக்கலாம்.
தண்ணீர் வசதி
  • பண்ணையில் செய்யப்படும் பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும்.
  •  எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதும் தண்ணீர் இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம் இருக்கவேண்டும்.
மின்சார வசதி
  • பண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.
  • பண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கும், வெளிச்சம் தரும் மின்விளக்குகள் வேலை செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.
காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
  • திறந்த வெளியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் உயரமாக வளரக்கூடிய மரங்களை கட்டிடங்களைச் சுற்றி வளர்க்கவேண்டும்.
  • இதனால் காற்றின் வேகம் குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும் குறைக்கப்படும்.
சத்தம் மற்றும் இதர தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல்
  • சத்தம் அதிகம் உண்டாக்கும் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள், சாக்கடைக் கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில் பண்ணை அமையக்கூடாது.
  • தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் வாயு மற்றும் திரவக் கழிவுகள் சுற்றுப்புறத்தையும் மாசடையச் செய்துவிடும்.
  • கால்நடைகளின் உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும். எனவே கால்நடைப் பண்ணையானது நகரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
சந்தை வசதி
  • கால்நடைப் பண்ணையானது நகரத்தை விட்டு தள்ளியிருந்தாலும் அது நகரத்திற்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு பண்ணை நகரத்திற்கு அருகில் இருப்பதும் அவசியமாகும்.
போக்குவரத்து வசதி
  • பண்ணை அமையுமிடத்தினை எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் முறையான சாலை வசதி அவசியமாகும்.
  • இதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன், பண்ணையிலிருந்து பெறப்படும் உற்பத்திப்பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும்.
இதர வசதிகள்
  • இதர வசதிகளான தொலைபேசி, பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின் குழந்தைகளுக்கு பள்ளி வசதி, தபால் அலுவலகம், கடைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் போன்றவையும் பண்ணைக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.


கால்நடைப் பண்ணையினை வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை
  • கறவை மாடுகள், பன்றிகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் போன்ற ஒவ்வொரு கால்நடை இனத்திற்கும் தனித்தனியான வடிவமைப்புடன் கூடிய கட்டிடங்கள் தேவைப்படும். எனவே கட்டிட வடிவமைப்பு கால்நடைகளின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு கால்நடைகளுக்கும் வெவ்வேறு விதமான உற்பத்தி மற்றும் மேலாண்மை முறைகளும் தேவைப்படும். எனவே கால்நடைப் பண்ணையை வடிவமைப்பதற்கு முன்பு கீழ்க்கண்ட காரணிகளை நினைவில் கொள்ளவேண்டும்.
பண்ணைவடிவமைப்பு
  • பண்ணையில் நன்றாக வேலை செய்வதற்கேற்றவாறு அது ஒரு சிறிய மாதிரி வடிவமைக்கப்பட வேண்டும்.
  • இவ்வாறு சிறிய மாதிரியை வடிவமைப்பதால், பல்வேறு விதமான கால்நடைகளுக்குத் தேவைப்படும் இடவசதி,தீவனத்தொட்டிகளின் அளவு போன்ற பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
கட்டிடங்களின் வடிவமைப்பு
  • எல்லாவிதமான  கால்நடைகளுக்கும்  பொருந்தும் வகையில் பண்ணையில் கட்டிடங்களை வடிவமைக்கவேண்டும்.
  • கட்டிடங்களின் வெளிப்புற அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பது போன்று அமைக்கபடவேண்டும்.
கூரைகளின் வடிவம்
  • அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப பண்ணை கட்டிடங்களின் கூரை அமைப்பு இருக்கவேண்டும். கேபிள் கூரை வடிவமைப்பில் கூரையில் காற்றோட்டம் இருக்கும் வகையில் அமைக்கப்படும் கூரை அமைப்பு வெப்பம் அதிகமுள்ள பகுதிகளுக்கு ஏற்றது.
  • குறைந்த அகலமுடைய கட்டிடங்களுக்கு மானிட்டர் கூரை ஏற்றதாகும்.
கட்டிடங்களின் வரையறுக்கப்பட்ட அகலம்
  • ஒரு வரிசை மாட்டுக்கொட்டகையின் வரையறுக்கப்பட்ட நீளம் 3.85 முதல் 4.25 மீட்டர்களும், இரண்டு வரிசை மாட்டுக்கொட்டகையின் நீளம் 7.90 முதல் 8.70 மீட்டர்கள் வரை இருக்கவேண்டும்.
பண்ணைக்கொட்டகையின் வரையறுக்கப்பட்ட உயரம்
  • பண்ணையில் கூரை அமைக்கப் பயன்படும் பொருட்களுக்கேற்பவும், தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கேற்பவும் கொட்டகையின் உயரம் வேறுபடும்.
கட்டிடங்களின் நீளம்
  • பண்ணைக் கட்டிடங்களின் நீளம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். பண்ணையில் பராமரிக்கப்பட வேண்டிய கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து கட்டிடத்தின் நீளம் வேறுபடும்.
  • பண்ணையிலுள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து பண்ணைக் கொட்டகையின் நீளம் கணக்கிடப்படுகிறது.
  • உதாரணமாக, பண்ணையில் 15-20 கறவை மாடுகள் ஒற்றை வரிசையிலும், 20-50 மாடுகள் இரட்டை வரிசையில் கட்டி பராமரிக்கப்பட வேண்டுமென்றாலும், 50 மாடுகளுக்கு மேல் பராமரிக்கப்பட வேண்டுமென்றால் தனியாக கொட்டகை அமைக்கப்படவேண்டும்.


உற்பத்திக்கு ஏற்றவாறு பண்ணைக்கொட்டகையினை வடிவமைத்தல்
சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை
  • கால்நடைகளின் மீது சுற்றுப்புற சூழ்நிலைகளின் கெடுதல் பலன்கள் ஏற்படுவதைத் தடுக்க சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட பண்ணைக் கொட்டகைகள் அமைப்பது தற்போது பிரபலாமாகி வருகிறது.
  • வெப்பமான பகுதிகளில் அமைக்கப்படும் கட்டிடங்களில், கட்டிடங்கள் கட்டப் பயன்படும் பொருட்கள், கட்டிடங்கள் அமைக்கும் முறை போன்றவை கூரை, சுவர் மற்றும் சுற்றியுள்ள நிலப்பகுதி போன்றவற்றின் மூலம் வெப்பத்தை கடத்தாவண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
  • வெப்பத்தை கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வெப்பம் கடத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது.
  • கால்நடைகளுக்கு ஏற்ற காற்றின் வேகம், ஈரப்பதம் போன்றவை கட்டிடங்களில் பராமரிக்கப்படுகிறது.
  • மேற்கூறிய எல்லாக் காரணிகளும், கால்நடைகளின் உற்பத்தித்திறன், கருவுறும் திறன், குட்டிகளை ஈனும் திறன் போன்றவற்றில் நன்மை தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
பொருட்களின் தரம்
  • ஒரு குறிப்பிட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளிலிருந்து அதிகத் தரம் வாய்ந்த பால் மற்றும் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • உதாரணமாக, இயந்திரம் மூலம் நகரும் தரைப்பகுதி அல்லது சாய்வான தரை அமைப்பு கொண்ட கோழிப்பண்ணையில் பராமரிக்கப்படும் கோழிகளிலிருந்து சான்றளிக்கப்பட்ட உயர் தர முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • பார்லர் முறையில் பால் கறக்கப்படும் கறவை மாடுகளில் இருந்து பெறப்படும் பால் குறைந்த அளவு பாக்டீரியாக்கள் கொண்ட உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது.
பண்ணையாட்களை கட்டுப்படுத்துதல்
  • கால்நடைப் பண்ணைப் பராமரிப்பில், வேலையாட்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்திற்கு மட்டுமே அதிகம் செலவாகிறது.
  • பண்ணைக் கட்டிடங்களை முறையாக வடிவமைப்பதால், வேலையாட்களின் வேலை செய்யும் திறன் அதிகரிக்கப்படுவதுடன், வேலையாட்களுக்கு ஆகும் செலவும் குறைகிறது. இரண்டு வரிசையில் மாடுகள் கட்டுமாறு அமைக்கப்பட்ட பண்ணைக் கட்டிடங்களில் பண்ணையாட்கள் ஒரே சமயத்தில் இரண்டு வேலைகளை செய்யலாம்.
  • தீவனம் எடுத்துச் செல்லும் வழி, பால் கொண்டு செல்லும் வழி, முட்டை எடுத்து செல்லும் வழி, மாடுகளை எடை போடுவதற்கான தனியான மேடை போன்றவற்றை வடிவமைப்பதால் பண்ணையில் வேலையாட்களுக்கான செலவைக் குறைக்கலாம்.
நோய்த்தடுப்பு
  • பண்ணையில் கால்நடைகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துதற்கு முறையான பண்ணைக் கட்டிட வடிவமைப்பு அவசியமாகும்.
  • எளிதில் கழுவி விடும் வகையிலும், நல்ல வடிகால் வசதியுடன் அமைக்கப்பட்ட தரை, கழுவி விடும் வகையில் வடிவமைக்கப்பட்ட சுவர்கள் போன்றவை பண்ணையில் நோயினைக் கட்டுப்படுத்தும்.
  • பண்ணைக்கு ஏற்ற பொருத்தமான வடிகால் வசதி, பண்ணையிலுள்ள கால்நடைகளின் கழிவுகளை சுகாதாரமாக அப்புறப்படுத்துதற்கு தேவைப்படுவதால், கால்நடைகளைத் தாக்கும் நோய்களை தடுக்க உதவி புரிகிறது.
  • கால்நடைக் கொட்டகையின் தரையானது, ஈரத்தன்மையில்லாமல் அமைக்கப்படுவதால், பண்ணையின் உட்பகுதியில் அதிகப்படியான ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்கப்படுகிறது. இதனால் இளம் கால்நடைகளுக்கு சுவாச மண்டலக் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.
பண்ணைக் கட்டிடங்களின் வரையறுக்கப்பட்ட உயரம்
  • அந்தந்தப் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலைகளுக்கு ஏற்றவாறும், கூரை அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஏற்றவாறும் பண்ணைக் கட்டிடங்களின் உயரம் வடிவமைக்கப்படவேண்டும்.
பண்ணைக் கட்டிடங்களின் நீளம்
  • பண்ணைக் கட்டிடங்களின் நீளம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். பண்ணையில் பராமரிக்கப்பட வேண்டிய கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து கட்டிடத்தின் நீளம் வேறுபடும்.
  • பண்ணையிலுள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து பண்ணைக் கொட்டகையின் நீளம் கணக்கிடப்படுகிறது.
  • உதாரணமாக, பண்ணையில் 15-20 கறவை மாடுகள் ஒற்றை வரிசையிலும், 20-50 மாடுகள் இரட்டை வரிசையில் கட்டி பராமரிக்கப்பட வேண்டுமென்றாலும், 50 மாடுகளுக்கு மேல் பராமரிக்கப்பட வேண்டுமென்றால் தனியாக கொட்டகை அமைக்கப்படவேண்டும்.

top
  பண்ணைக் கட்டிடங்களின் வரைபடம் தயாரித்தல்
  • பண்ணைக் கட்டிடங்களை வடிவமைக்க திட்டமிடுவதற்கும், வடிவமைப்பதற்கும் முன்பாக கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ளவேண்டும்.
  • பண்ணைக் கட்டிடங்கள் பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படவேண்டும்.
  • பண்ணைக்கட்டிடங்கள் வேலையாட்களுக்கான செலவைக் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படவேண்டும்.
  • பண்ணையில் செய்யும் வேலையின் திறன் நன்றாக இருக்கவேண்டும்.
  • அமைக்கப்பட்ட பண்ணை திரும்ப விற்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
பண்ணை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்படும் இடத்தின் வரைபடம்
  • இது பண்ணையில் கட்டிடங்கள் அமையும் இடத்தினைத் தேர்ந்தெடுக்க உதவிடும்.
  • இந்த திட்டமிட்ட பண்ணை இட வரைபடத்தில் பல்வேறு விதமான கட்டிடங்களின் அமைப்பபு, சாலை அமைப்பு, பண்ணைக் கட்டிடங்களுக்கு இடையிலுள்ள இடைவெளி ஆகியவை குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தரை வரைபடம்
  • இந்த வரைபடத்தில் பண்ணையின் மேற்புறம் இருந்து பார்க்கும்போது  அவற்றின் கட்டிடங்கள் தெரிவதை வரைபடமாகக் கொண்டிருக்கவேண்டும்.
  • இந்த வரைபடத்தில் கட்டிடங்களின் நீள அகலங்கள், ஜன்னல்களின் அமைப்பு, கதவுகள் போன்ற விவரங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கட்டிடங்களின் வெளிப்புற அமைப்பு
  • இந்த வரைபடத்தில் கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பு பற்றி வரையப்பட்டிருக்கவேண்டும்.
கட்டிடத்தின் வெட்டு அமைப்பு
  • இந்த வரைபடத்தில் கட்டிடத்தின் அடித்தளம், தரை வகைகள், சுவர்கள், கூரை போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
  • கட்டிடத்தின் உட்புற அமைப்புகளான பிரிக்கும் பகுதிகள், தீவனமளிக்கும் வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
கட்டிடத்தின் மொத்த மாஸ்டர் வடிவமைப்பு
  • கட்டிடத்தின் ஒரு மாதிரி வடிவமைப்பைத் தயார் செய்த பின்பு, அது திருப்தியளிக்கும் வகையில் அமைந்திருந்தால், மாஸ்டர் பிளேன் தயாரிக்கப்பட வேண்டும்.
  • மாஸ்டர் பிளேன்கள், ஒரு கண்ணாடித் தாள் போன்ற காகிதத்தில் கருப்பு மையில் வரையப்பட்டிருக்கவேண்டும்
  • மேற்கூறிய வடிவமைப்பினை வரைந்து பிறகு அதிலிருந்து நீல வரை படம் தயார் செய்யவேண்டும்
வேண் டைக் பிரிண்ட்
  • பண்ணை வரைபடத்தின் நகல் வேண் டைக் பிரிண்ட் ஆகும்.வெள்ளை தாளில் கருப்பு அல்லது நீல கோடுகளைக் கொண்டு வரை படம் இதில் வரையப்பட்டிருக்கும்
புளூ பிரிண்ட்
  • நகல் வரைபடங்களிலிருந்து, கட்டிடங்களின் வரைபடங்களின் பிரதிகள் நீலத்தாளில்  எடுக்கப்பட்டு பின் அவை பொட்டாசியம்டைகுரோமைட் உதவியால் நிலைப்படுத்தப்படுகின்றன
  • இந்த வரைபடமானது,கட்டிடங்களை அமைக்கத் தேவைப்படும் கட்டுமானத்திற்கான செலவினங்களை மதிப்பிடப் பயன்படுகிறது
கட்டிடங்களின் அமைப்பு
  • பண்ணையிலுள்ள வீடுகள் சாலையினை நோக்கி இருக்குமாறு வடிவமைக்கப்படவேண்டும். இதர கட்டிடங்கள் சாலையிலிந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திரும்பியிருக்குமாறோ அல்லது கட்டிடங்களின் பின்புறம் சாலையினை நோக்கி இருக்குமாறோ அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்வாறு அமைக்கப்படுவதால் காற்று மற்றும் சூரிய ஒளியின் போக்குக்கு ஏற்றவாறு கட்டிடங்கள் இருக்கும்
  • பொதுவாக பண்ணையிலிருக்கும் கால்நடைகளின் கொட்டகைகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நீளவாக்கில் அமைக்கப்படுகின்றன. மேலும் கொட்டகைகளின் திறந்த வெளிப்பகுதி வடக்கு நோக்கி இருக்குமாறு அமைக்கப்படுகின்றன. இதனால் குளிர் காலத்தின் போது கால்நடைகளுக்கு நேரடியாக சூரிய ஒளி கிடைக்கும். தவிரவும் சூரிய ஒளி நேரடியாக கால்நடைகளின் கொட்டகையில் விழவும் இது வழி செய்கிறது

 பண்ணையில் கட்டிடங்களின் அமைப்பு அல்லது கட்டிடங்களின் வரிசை
  • கால்நடைப்பண்ணைகளில் அமைக்கப்படும் பல்வேறு  கட்டிடங்களின் வடிவமைப்பு, கட்டிடங்களின் வரிசை போன்றவை பண்ணையின் வெற்றியினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.
  • பண்ணையின் வடிவமைப்பு முறையாக அமைந்தால் மட்டுமே லாபத்தை அதிகரித்து உற்பத்தி செலவினங்களைக் குறைத்து பண்ணையின் வளர்ச்சியினை ஊக்குவிக்க முடியும்
பண்ணையில் உள்ள கட்டிடங்கள்:

1.பண்ணை வீடுகள்
2. கால்நடைகளின் கொட்டகைகள்
3. பண்ணையின் சேமிப்புக்கூடம்
4.நோயுற்ற கால்நடைகளை தனியாக பராமரிக்கும் கொட்டகை
5.புதிதாக வாங்கிய கால்நடைகளைத் தனித்து பராமரிக்கும் கொட்டகை

பண்ணை வீடுகள்
  • பண்ணை வீடுகள் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்கள் வசிப்பதற்காக கட்டப்படும் வீடுகளாகும்
  • பண்ணையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு கால்நடைகளின் எருக்குழியிலிருந்து பூச்சிகள் மற்றும் ஈக்கள் வராதவாறு, எருக்குழியிலிருந்து காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் வீடுகள் அமைக்கப்படவேண்டும்
  • பண்ணையில் வீடுகள் காற்றடிக்கும் திசையில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்
  • பண்ணை அலுவலகம் பண்ணையின் மையப்பகுதியில் அமைந்திருக்கவேண்டும்
  • பண்ணை மேலாளரின் வீடு பண்ணையின் நுழைவுவாயிலுக்கு அருகில் அமைக்கப்படவேண்டும்.இதனால் பண்ணை மேலாளர் பண்ணையினை நன்றாக மேலாண்மை செய்ய முடியும்
  • பண்ணையிலுள்ள அனைத்து கட்டிடங்களும் அருகருகே இருக்குமாறு அமைக்கப்படவேண்டும்.இதனால் பண்ணையை நன்றாக நடத்தமுடியும். தவிரவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பண்ணைக் கட்டிடங்களை அருகில் அமைக்கவும் வேண்டும்
  • பண்ணையிலுள்ள முக்கியமான பகுதிகள் பண்ணையின் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்படவேண்டும்
  • பல்வேறு விதமான கால்நடைகளை ஒரே பண்ணையில் பராமரிக்கும்போது, பன்றிப்பண்ணையை, கறவை மாடுகளின் கொட்டகைகளிலிருந்து தொலைவில் இருக்குமாறு அமைக்கவேண்டும்
கால்நடைக் கொட்டகைகள்
  • பண்ணையிலுள்ள இந்த கட்டிடங்கள் கால்நடைகளை பராமரிப்பதற்காக கட்டப்பட்டவை
  • பண்ணையாட்களின் வீடுகள் மற்றும் பண்ணையிலுள்ள இதர கட்டிடங்களிலிருந்து கால்நடைகளின் கொட்டகைகள் தொலைவில் அமைக்கப்படவேண்டும்
  • ஆனால் கால்நடைக் கொட்டகைகளுக்கும், பண்ணையாட்களின் வீடுகளுக்கும் இடையில் அதிகத் தொலைவு இருக்கக்கூடாது.இவ்வாறு இருந்தால் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்கள் கால்நடைக்கொட்டகைகளுக்கு இரவு நேரத்தில் அல்லது மாறான தட்பவெப்ப சூழ்நிலைகளில் கால்நடைகளை கவனிக்கத் தயங்குவர்
பண்ணையின் சேமிப்புக்கூடம்
  • பண்ணையின் சேமிப்புக்கூடம், தீவனங்கள் மற்றும் இதர பண்ணைக்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் பண்ணை உற்பத்திப் பொருட்களை சேமித்துவைக்கப் பயன்படுகிறது
புதிதாக வாங்கிய கால்நடைகளைத் தனித்து பராமரிக்கும் கொட்டகை
  • இந்த கொட்டகை பண்ணையின் நுழைவு வாயிலில் அமைக்கப்படவேண்டும்
  • இவ்வாறு அமைக்கப்படுவதால் புதிதாக வாங்கி வந்த கால்நடைகளை தனியாக பராமரித்து, அவற்றுக்கு எந்த நோய்களின் தாக்குதலும் இல்லாமல் இருந்தால் அவற்றை பண்ணையில் சேர்க்கமுடியும்
நோயுற்ற கால்நடைகளை தனியாக பராமரிக்கும் கொட்டகை
  • இந்தக் கொட்டகை நோயற்ற மாடுகளின் கொட்டகையிலிருந்து தனியாக இருக்கவேண்டும். இக்கொட்டகையில் நோயுற்ற மாடுகளைப் பராமரிக்கலாம்

top
  கால்நடைக் கொட்டகையின் கட்டிட வடிவமைப்பு

1. அஸ்திவாரம்
    கட்டிடங்களை அமைப்பதற்கு தேவைப்படும் அடிப்படைக் கட்டமைப்பு அஸ்திவாரமாகும். அஸ்திவாரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன
    அவை 1. அடித்தளம், 2.அஸ்திவாரச் சுவர்
அடித்தளம்  

    கட்டிடத்தின் எடையினைத் தாங்கும் அஸ்திவாரச் சுவரின் அகண்ட பகுதி, அடித்தளமாகும்
    இதன் அளவுகள் பின்வருமாறு

    அளவுகள்

    திடமான அமைப்பு

    இலகுவான
    அமைப்பு

    அகலம்

    24’’

    12’’

    ஆழம்

    12’’

    8’’

அஸ்திவாரச் சுவர்  
  • பண்ணைக் கட்டிடங்கள் அமைக்கப்படும் இடத்தின் மண்ணைப் பொருத்து, அஸ்திவாரச் சுவரின் உயரம் மாறுபடும்
  • கடினத்தன்மை இல்லாத மண்ணில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு ஆழமான அஸ்திவாரமும்,பாறைத்தன்மை வாய்ந்த மண்ணில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு ஆழம் குறைவான அஸ்திவாரமும் தேவைப்படும்
  • சிறிய பண்ணைக் கட்டிடங்களின் உயரம் பொதுவாக 18 அடி முதல் 30 அடி வரை இருக்கும். இதன் தடிமன் 9 முதல் 12 அங்குலமாக இருக்கும்

  • அஸ்திவாரம் அமைக்கப் பயன்படும் பொருள்கள்
    • அஸ்திவாரம் சிமெண்ட் கான்கிரீட் அல்லது செங்கற்கள்,சிமெண்ட் கொண்டு அமைக்கப்படுகின்றன
    • கான்கிரீட் அடித்தளம் கடினத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அது மோனோலி திக் அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது

    அடித்தளம் அமைக்கும் முறைகள்
    • அடித்தளம் அமைக்க வாணிகள் வெட்டி, அடிப்பகுதியினைக் கடினப்படுத்த வேண்டும்
    • பிறகு வாணிக்குழியினை கற்கள் மட்டும் இதர பொருட்களைக் கொண்டு நிலமட்டம் வரை உயர்த்தவேண்டும்
    • பிறகு அடித்தளத்தை சமமாக அமைக்கவேண்டும்
    • பிறகு ஈரத்தன்மை இல்லாத அஸ்பால்ட் அல்லது இதர பொருட்களை 4 % தயாரித்து வாணிக்குழிகளின் மேற்பகுதியில் மூடவேண்டும்

2. சுவர்கள் மற்றும் சுவர் அமைக்கப் பயன்படும் பொருட்கள்
  • அஸ்திவாரத்திலிருந்து கட்டிடத்தை முழுவதும் மூட சுவர்கள் அமைக்கப்படுகின்றன
  • இவை செங்கற்கள், கற்கள், சிமெண்ட் காங்கிரீட் போன்றவற்றால் 9,12 மற்றும் 6 அங்குல அகலத்தில் அமைக்கப்படுகின்றன
  • எடையினைத் தாங்காத சுவர்கள் 4.5 அங்குல அகலத்தில் அமைக்கப்படுகின்றன
  • கட்டிடங்களில் பராமரிக்கப்படும் கால்நடைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு பண்ணைக் கொட்டகைகளின் சுவர் அமைக்கப்படவேண்டும்
  • பண்ணையில் அமைக்கப்படும் சுவர்களை பூசும் முறைகள் பின்வருமாறு
  • நில மட்டத்தின் அடிப்பகுதியிலிருந்து 4 அடி உயரத்திற்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு சிமெண்டினால் சுவர்களைப் பூசி விட வேண்டும்
  • கட்டிடங்களின் மூலைகள் தூசு சேர்வதைத் தவிர்க்க வட்டமாக அமைக்கப்படவேண்டும்
  • கட்டிடங்களின் உட்பகுதியில் விளிம்புகள் கூர்மையாக இல்லாதவாறு அமைக்கப்படவேண்டும்

செங்கற்கள்  
    1).கட்டிடங்கள் அமைக்கப் பயன்படும் கற்கள்
    • இக்கற்கள் மண் மூலம் தயாரிக்கப்படுகின்றன (களி மண் 50% மற்றும் மணல் 50%)
    • செவ்வக வடிவமுடைய இக்கற்கள் அச்சுகளில் தயாரிக்கப்பட்டு, இயந்திரங்கள் மூலம் அறுக்கப்படுகின்றன
    • பிறகு அவை குறிப்பிட்ட வெப்பநிலையில் சூளைகளில் வைக்கப்பட்டு சுடப்படுகின்றன
    • இயந்திரங்களால் முறையாகத் தயாரிக்கப்பட்ட கற்களின் நீள,அகல உயரங்கள்-9" x 4½ " x 3".
    • இக்கற்கள் ஒரே மாதிரியான வடிவம், நிறம் மற்றும் தன்மையினை உடையவை. மேலும் அவற்றின் விளிம்புகள் கூர்மையாக இருக்கும்
    • இக்கற்களை கடினமான பொருட்களின் மீது மோதினால் மணி அடிப்பது போன்ற ஒலியினை எழுப்பும்
    2). விட்ரிஃபைட் கற்கள்
    • 10% மேல் இரும்பு ஆக்சைடு கொண்ட இக்கற்கள் கடினத்தன்மை வாய்ந்த, தண்ணீர் உறிஞ்சாத, நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய கற்களாகும்
    • இவை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்படுகின்றன
    • இவற்றின் வெளிப்பகுதியில் விளிம்புகள் அமைக்கப்பட்டு, கடினமான மற்றும் உறுதியான அமைப்புடன் இருக்கும்
    • இவை ஈரத்தை உறிஞ்சும் தன்மை அற்றவை
    • இவை கால்நடைப்பண்ணைகளின் தரையினை அமைக்கப் பயன்படுகின்றன
    3).கிளேஸ்ட் கற்கள்
    • இக்கற்கள் சைனா களிமண்ணால் தயாரிக்கப்பட்டு வெளிப்புறம் கண்ணாடி போன்ற பொருட்கள் பூசப்பட்ட அல்லது எனாமல் பூசப்பட்ட கற்களாகும்
top
B. கற்கள்  
    அ. கிரானைட் கற்கள்
    • கிரானைட் கற்கள் கடினத்தன்மை வாய்ந்த இயற்கையில் கிடைக்கும் கற்களாகும். இவை கருப்பு நிறத்திலோ அல்லது வெளிறிய சாம்பல் நிறத்திலோ இருக்கும்.
    • இவை நீண்ட நாட்களுக்கு உழைக்கும் தன்மை உடையவை. பல்வேறு வகையான தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவை.இக்கற்கள் பொதுவாக கால்நடைப் பண்ணைகளில் சுவர்கள் மற்றும் தரைகள் அமைக்கப் பயன்படுகின்றன
    • கிரானைட் கற்களின் மேற்புறத்தினை அடிக்கடி சொரசொரப்பாக்கலாம்

    ஆ.வின் கற்கள்

    • இக் கற்களும் இயற்கையான பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுபவை. ஆனால் இவை கிரானைட் கற்களைப் போன்று நீண்ட காலம் உழைக்காது.மேலும் பல்வேறு தட்பவெப்பநிலைகளுக்கும் ஏற்றவை அல்ல. எனவே பெரிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு இக்கற்கள் உபயோகப்படுத்தப்படுவதில்லை
    • முழு வின் கற்கள் சுவர்கள்  கட்டுவதற்கும், உடைந்த சிறு கற்கள் சிமெண்ட் காங்கிரீட்டிலும் கலந்து உபயோகப்படுத்தப்படுகின்றன

    இ.மண் கற்கள்

    • இக்கற்கள் முழுதாக உருவாகாத பாறைகளாகும்.இவை உறுதியாக இருக்காது.மேலும் நீண்ட நாட்களுக்கு உழைப்பதில்லை.எனவே இவை அதிக வலுவான கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்படுவதில்லை
    • ஆனால் இக்கற்களை வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அமைப்புகளில் மாற்றிக்கொள்ளலாம்.எனவே இக்கற்கள் கட்டிடங்களை அழகுபடுத்தப் பயன்படுகின்றன

இணைப்புப் பொருட்கள்  
    1.சுண்ணாம்பு
    • சுண்ணாம்புத் தூள், சுண்ணாம்புக் கற்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சுண்ணாம்புக்கல்லை சூடுபடுத்தி பிறகு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்
    • இதிலிருந்து கிடைக்கும் வெள்ளை தூள் சுண்ணாம்பாகும்

    2.சுண்ணாம்பு மணல் கலவை

    • சுண்ணாம்பு  ஒரு பங்கும், மூன்று பங்கு மணலும் கலந்து பிறகு இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்ப்பதால் கிடைக்கும் கலவை சுண்ணாம்பு மணல் கலவையாகும்

    3.சிமெண்ட்

    • 70% சாக்,30% களிமண் போன்றவை கலந்து தண்ணீர் சேர்த்தால் சிமெண்ட் கலவை கிடைக்கிறது
    • பிறகு இந்தக் கலவையினை நீண்ட நேரம் அசையாமல் வைத்திருக்கும்போது அதன் அடியில் தேங்கும் தூளை எடுத்து, சூடாக்கி,  பவுடராக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது
    • சிமெண்ட் சாம்பல் நிறத்திலோ அல்லது  நீலம் கலந்த சாம்பல் நிறத்திலோ இருக்கும். செங்கற்கள், கற்கள் மற்ற இதர பொருட்களுடன் சேர்ந்து சிமெண்ட் ஒரு தரமான இணைக்கும் பொருளாகப் பயன்படுகிறது

    4.சிமெண்ட் மார்ட்டர்

    • சிமெண்ட் ஒரு பங்கும் மணல் 3 பங்கும் கலந்தது சிமெண்ட் மணல் கலவையாகும்

    5.சிமெண்ட் காங்கிரீட் கலவை

      உட்பொருட்கள்

      அளவு

      ஜல்லி

      4 பங்கு

      மணல்

      2 பங்கு

      சிமெண்ட்

      1 பங்கு

      தண்ணீர்

      போதுமான அளவு


3. கூரைகள்
  • கூரைகள் கால்நடைகளை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க அமைக்கப்படுகின்றன
  • கால்நடைக் கொட்டகைகளின் கூரைகள் எளிமையாக இருக்கவேண்டும். மேலும் இதனை அமைக்க மலிவான பொருட்களே பயன்படுத்தப்படவேண்டும்
  • வெப்பம் அதிகமுள்ள பகுதிகளிலுள்ள கால்நடைக் கொட்டகைகளின் கூரைகள் வெப்பத்தைக் கடத்தாத திறன் அதிகமுள்ளதாக இருக்கவேண்டும்
  • மேற்கூறிய திறன் இல்லாத கூரைகள் அமைக்கப்படும்போது வெப்பத்தை கடத்தாத இதர அமைப்புகள் கொட்டகைகளுக்குள் அமைக்கப்படவேண்டும்
அ. கூரைகளின் அமைப்பு
    1. சாய்வான லீன் கூரை
    • இந்த வடிவ கூரைகள் எளிமையான சாய்ந்த கூரையினைக் கொண்ட கட்டிடங்களைக் கொண்டிருக்கும்
    • இந்த சாய்ந்த கூரைகளில் காற்றோட்டத்திற்காக துளைகள் அமைக்கமுடியாது
    • இந்த சாய்வான கூரைக்கொட்டகையில் ஒரு பக்க சுவர் உயரமாகவும், மற்றொரு பக்க சுவர் குட்டையாக கூரை சாய்வாக அமைய ஏதுவாக இருக்கும்
    2. கேபிள் கூரை
    • இந்த வகை கூரை அமைப்பில் இரண்டு கூரைகள் சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும்
    • இந்த கூரை அமைப்பில் காற்றோட்டம் இருக்கும்
    3.மானிட்டர் கூரை
    • இந்த கூரை அமைப்பில் இரண்டு கூரைகள் இருக்கும். இவற்றில் ஒரு கூரை மற்றொன்றின் மீது சாய்வாக பொருந்தியிருக்கும். இந்த இரண்டு கூரைகளுக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்குமாறு அமைப்பதால் காற்றோட்டத்திற்கு வழி வகை ஏற்படுகிறது
    • வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கு இந்த வகை கூரை அமைப்பு ஏற்றதாகும். ஏனெனில் இவ்வகை கூரை அமைப்பில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்க ஏதுவாகிறது
    4. செமி மானிட்டர் கூரை
    • இந்த வகை கூரை அமைப்பிலும் ஒரு கூரை மற்றொன்றின் மீது ஒரு அடி இடைவெளியில் பொருத்தப்பட்டிருக்கும்
    5.கோதிக் வளைவு கூரை
    • இந்த வகை கூரை வளைந்த அமைப்புடையது. இதனால் பண்ணையின் சேமிப்புப் பகுதிகளுக்கு இந்த வகை கூரை அமைப்பு மிகவும் ஏற்றது
    • தீவனத்தினை சேமித்து வைக்கும் கட்டிடங்களில் இந்த வகை கூரை அமைப்பு கொண்ட கட்டிடங்கள் கட்டப்படுகின்றன
ஆ.கூரை வேயப்பயன்படும் பொருட்கள்
    i. ஓடுகள்
        • இந்த ஓடுகள் விலை மலிவானவை மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை
        • இந்த ஓடுகள் வெப்பத்தினை விரைவாகக் கடத்தும் தன்மையுடையவை
        • வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கு இவ்வகை ஓடுகள் ஏற்றவை
        • ஆனால் காற்று அல்லது விபத்து போன்ற காரணங்களால் இவ்வகை ஓடுகள் எளிதில் சேதமடைந்து விடும்
        • குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த ஓடுகளை மாற்றவேண்டும்
      1). வட்ட வடிவ ஓடுகள் அல்லது மங்களூர் ஓடுகள் :
            • இந்த ஓடுகள் செவ்வக வடிவத்தில் வெளிப்புறத்தில் கோடுகளுடன், உட்புறத்தில் இரண்டு நிப்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்
            • இந்த ஓடுகள் ஒன்றன் மீது ஒன்றாக பொருந்துமாறு அமைக்கப்பட்டு கூரைகள் வேயப்படுகின்றன
        2).நாட்டு ஓடுகள் :
        • இந்த ஓடுகள் விலை மலிவானவை மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை
        • இவ்வகை ஓடுகள் வெப்பத்தை மெதுவாகக் கடத்தும்
        • இவ்வகை ஓடுகள் அரை வட்டவடிவில், வெவ்வேறு வடிவத்திலும் அளவிலும் இருக்கும்
        • இந்த ஓடுகளும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கினார் போன்று அமைக்கப்பட்டு கூரை வேயப்படுகிறது
 

    ii.ஆஸ்பெஸ்டாஸ் (சிமெண்ட்) அட்டைகள்

      • கால்நடைப் பண்ணைகளில் ஆஸ்பெஸ்டாஸ் (சிமெண்ட்)  அட்டைகள் கூரைகள் அமைக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன
      • சிமெண்ட் கலவையுடன் வெவ்வேறு தாவர நார்களை சேர்த்து இந்த அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன
      • மேடு பள்ளங்களுடன் கூடிய இந்த அட்டைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன
      • இரும்பினாலான டிரெஸ்கள் எனப்படும் பைப்களில் இந்த அட்டைகள் எளிதில் பொருத்தப்படு கூரை வடிவமைக்கப்படுகிறது. மேலும் இந்த அட்டைகள் ஓடுகளை விட நீண்ட காலம் உழைக்கக்கூடியவை
      • ஆனால் வெயில் காலங்களில் இந்த கூரை வேயப்பட்ட கட்டிடங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்
    iii. அலுமினிய அட்டைகள்
      • மேடு பள்ளங்களுடன் கூடிய அலுமினிய அட்டைகள் வெவ்வேறு தடிமன்களிலும், அளவுகளிலும் சந்தையில் கிடைக்கின்றன
      • இவை 2.5 அடி அகலத்தில் 8-12 அடி நீளத்துடன்  கிடைக்கின்றன
      • இவைகள் எடை குறைவாக இருப்பதால் எளிதில் பொருத்தமுடியும்
      • அலுமினிய அட்டைகளின் மேற்பரப்பு பளபளப்பாக இருப்பதால் இவை சூரிய ஒளியினை எதிரொளிக்கின்றன. இந்த ஒளி எதிரொலிக்கும் தன்மையால் இக்கூரைகள் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் வெயில் காலத்தில் கூட குளிர்ச்சியாகக் காணப்படும்
      • அலுமினிய அட்டைகளின் விலை அதிகம், மேலும் உபயோகப்படுத்தப்பட்ட அட்டைகளை திரும்ப விற்பதற்கான விற்பனை வாய்ப்புகளும் அதிகம்
      • அலுமினிய அட்டைகள் துருப்பிடிக்காதவை. எனவே நீண்ட நாட்களுக்கு உழைக்கும் தன்மையுடையவை
    III. தாவர நார்களால் ஆன கூரைகள்
      • இந்த வகைக் கூரைகள் பனைமர மட்டைகள் அல்லது தென்னை மட்டைகளால் வேயப்படுகின்றன
      • சில நேரங்களில் வைக்கோல் அல்லது பச்சை வைக்கோல் கூட  கூரை வேய பயன்படுத்தப்படுகிறது
      • இவை விலை மலிவானவை, மேலும் வெப்பத்தை குறைவாகக் கடத்துபவை
      • இந்த கூரைகள் வெயில் காலத்தில் கட்டிடங்களை குளிர்ச்சியாக வைக்கின்றன
      • ஆனால் இந்த வகைக் கூரைகள் நீண்ட நாட்களுக்குத் தாங்காது. எனவே இந்த கூரைகளை வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றவேண்டும்
      • இந்த வகைக் கூரைகள் தீ விபத்தினால் எளிதில் பாதிக்கப்படுகின்றன
    iv. துருப்பிடிக்காத இரும்பு அட்டைகள்
      • இந்த அட்டைகள் இரும்பினால் செய்யப்பட்டு அவற்றின் மீது துத்தநாக முலாம் பூசப்பட்டிருக்கும். இவை மேடு பள்ளங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன
      • இவை 6 அடி X 3 அடி என்ற அளவுகளில் கிடைக்கின்றன
      • இந்த அட்டைகள் பெரும்பாலும் கால்நடைப்பண்ணைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த அட்டைகள் மேயப்பட்ட கட்டிடங்கள் வெயில் காலத்தில் மிக வெப்பமாகக் காணப்படும்
      • இந்த அட்டைகளின் மீது வெள்ளை நிற பெயிண்டினை பூசுவது நல்லது. இவ்வாறு செய்வதால் இந்த அட்டைகளின் வெப்பம் உறிஞ்சும் திறன் குறையும்
      • இந்த அட்டைகள் உறுதியானவை, ஆனால் நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கும் போது துருப்பிடிக்கும்தன்மை உடையவை

4. கால்நடைக் கொட்டகைகளில் தரை அமைத்தல்
  • கட்டிடங்களின்  தரை ஒரு முக்கியமான அமைப்பாகும். கட்டிடத்தின் தரைப்பகுதியானது கால்நடைகள் நடக்கவும், படுக்கவும் இதர வேலைகளைச் செய்யவும் பயன்படுகிறது
  • எனவே கால்நடைக் கொட்டகைகளின் தரையானது, மேற்கூறிய வேலைகளைச் செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும்
  • கால்நடைக் கொட்டகைகளின் தரை கால்நடைகளின் கடினமான குளம்பு பகுதியின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஏற்றவாறும், கட்டிடத்தின் அதிக எடை வாய்ந்த கூரையைத் தாங்குமாறும் அமைக்கப்படவேண்டும்.தவிரவும் கால்நடைக் கொட்டகைகளின் தரை அமைக்க ஆகும் செலவு குறைவாகவும்  இருக்கவேண்டும்
  • கால்நடைக்கொட்டகைகளின் தரை கால்நடைகளுக்கு சுகாதாரமான முறையில் தீவனம் அளிப்பதற்கும்,கால்நடைகளின் திட மற்றும் திரவக் கழிவுகளை எளிதாக சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படவேண்டும்
  • கால்நடைக்கொட்டகைகளின் தரை கடினமான மற்றும் திடமான அஸ்திவாரத்தின்  மீது அமைக்கப்படவேண்டும். தீவனத்தொட்டியிலிருந்து, சாணம் மற்றும் திரவக்கழிவுகள் செல்லும் கால்வாய் வரை 1/60 என்ற அளவில் சாய்வாக அமைக்கப்படவேண்டும்
  • கால்நடைக் கொட்டகைகளின் தரை  வழுக்கும்தன்மை  அற்றதாகவும் இருக்கவேண்டும்
  • தரை  சொரசொரப்பாகவும்,கோடுகள் அமைக்கப்பட்டும் இருக்கவேண்டும்

1. கால்நடைக் கொட்டகைகளில் தரை அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள்
    • சிமெண்ட் கான்கிரீட்
    • விட்ரிபைடு கற்கள்
    • கற்கள்
    • செங்கற்கள்
    • மணல்
    i). சிமெண்ட் கான்கிரீட்
    • கால்நடைப் பண்ணைகளில் சிமெண்ட் கான்கிரீட்டிலான தரை பொதுவாக அமைக்கப்படுகிறது
    • நன்றாக அமைக்கப்பட்டால் இவ்வகை தரை அமைப்பு நீண்ட நாட்களுக்கு தாங்கும் தன்மையுடையது
    • வெப்ப மண்டலப் பிரதேசங்களில் இந்த தரை அமைப்பு கால்நடைகளுக்குத் தேவையான குளிர்ந்த சூழ்நிலையினை உருவாக்குகிறது
    • விபத்தினைத் தவிர்க்க இந்த தரை அமைப்பு சொர சொரப்பாகவும், கோடுகளுடனும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

    ii). செங்கற்கள்

    • சில சமயங்களில் செங்கற்கள், தரை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன
    • ஆனால் செங்கற்கள் தரை அமைக்க ஏற்றவை அல்ல
    • இவை தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு, எளிதில் உடைந்து விடும் தன்மையுடையவை
    • இவற்றின் விளிம்புகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டு, கற்களுக்கு இடையில் தரமான சிமெண்ட் பூசப்பட்டிருக்கும்

    iii). விட்ரிபைடு கற்கள்
    • இந்த வகை தரை அமைப்பு, கடினமான, தண்ணீரை உறிஞ்சாத, மேற்பரப்பில் கோடுகளுடன் கூடிய கற்களால் ஆன தரை அமைப்பாகும்
    • ஈரமற்ற, நீண்ட நாட்களுக்குத் தாங்கும் தன்மையுடைய இவ்வகை தரை அமைப்புகள் கால்நடைப் பண்ணைகளுக்கு ஏற்றவை
    • இந்த கற்கள் மணல் படுகைகளின் மீது அமைக்கப்பட்டிருக்கும்
    • கற்களுக்கு இடையிலுள்ள இடைவெளி, சிமெண்ட் பூச்சினால் இணைக்கப்பட்டிருக்கும்
    iv). கற்கள்
    • கிரானைட் கற்கள் எளிதில் கிடைக்கும்பட்சத்தில், மாட்டுப்பண்ணைகளில் தரையினை அமைக்கப் பயன்படுகின்றன
    • இந்த கற்களின் மேற்புறம் சொரசொரப்பாக்கப்பட்டு மணல் படுகையின் மீது அமைக்கப்படுகின்றன
    • இந்த வகை தரை அமைப்பு, நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடியது, மேலும் விலை மலிவானது
    v). மணல்
    • நல்ல நைசான மணல், கால்நடைப் பண்ணைகளில் தரைகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் மலிவான பொருளாகும்
    • மணல் தரை தண்ணீரை எளிதில் உறிஞ்சிக்கொண்டு, நீண்ட நாட்களுக்குத் தாங்குவதில்லை
    • அடிக்கடி இந்த தரை அமைப்பினை மாற்றுவதுடன், பராமரிப்பும் இவ்வகை தரை அமைப்பிற்குத் தேவைப்படும்
    • நோய் தாக்குதல்களின்போது இந்த தரை அமைப்பில் கிருமி நீக்கம் செய்ய முடியாது
    • மணல் தரை மீது சுண்ணாம்புக் கரைசல் அல்லது சாணக்கரைசலை தெளிப்பதால் இவ்வகை தரை அமைப்பினை பராமரிக்க முடியும்

2. கால்நடைக் கொட்டகைகளின் தரை வடிவமைப்பு  

    அ. திடமான தரை

    • திடமான தரை அமைப்பானது சிமெண்ட் கான்கிரீட், செங்கற்கள், கற்கள், மணல், ஜல்லி போன்றவைகளால் ஆன கடினமான தரை அமைப்பாகும்
    • திடமான தரை அமைப்பானது தண்ணீர் வடிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
    • மாட்டுக் கொட்டகையில், திரவக் கழிவுகள் வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் கழிவு நீர் வெளியேறும் கால்வாய் 1/40 முதல் 1/60  என்ற அளவிற்கு சாய்வாக  இருக்குமாறு அமைக்க வேண்டும்
    • கொட்டகையில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதற்காக, கொட்டகையின் தரை ஈரப்பதத்தினை உறிஞ்சாத வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
    • இம்மாதிரியான தரை அமைப்பில் முறையாக கொட்டகையினை சுத்தம் செய்வதும், கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

    ஆ. ஆழ்கூள தரை

    • இந்த வகை தரை அமைப்பில், மாடுகள் படுப்பதற்கு ஏற்ற வகையில் ஆழ்கூளம் அடுக்குகளாக போடப்பட்டிருக்கும்
    • வைக்கோல், மரத்தூள்கள், நிலக்கடலைத் தோல் பொட்டு, காய்ந்த இலைகள் ஆழ்கூளப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன
    • இந்த பொருட்களை 4-6 அங்குல உயரத்திற்கு தரையில் பரப்பி, ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆழ்கூளமாகப் பயன்படுத்தலாம்
    • கால்நடைகளின் சாணம் இந்த ஆழ்கூளப் பொருட்களுடன் கலந்து நன்றாக மக்கி விடும்
    • இது தவிர காய்ந்த ஆழ்கூளப் பொருட்கள் சாணத்திலிருக்கும் ஈரத்தன்மையினை உறிஞ்சிவிடுவதால், நுண்ணுயிரிகளின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது
    • ஆழ்கூளத்தில் அதிகப்படியான நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினை ஆழ்கூளத்தில் சுண்ணாம்பு தூளைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்

top
  கொட்டகை அமைப்பது பற்றிய விவரங்கள்

1. மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு
  • கறவை மாடுகளுக்கான  கொட்டகை அமைப்பதில் இந்தியாவில் வெவ்வேறு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன
  • தொன்று தொட்டு அமைக்கப்படும் மாட்டுக்கொட்டகைகள் தேவைக்கேற்பவும், கிடைக்கும் மூலப்பொருட்களுக்கேற்றவாறும், விவசாயிகளின் விருப்பத்திற்கேற்றவாறும் அமைக்கப்படுகின்றன
  • கொட்டகைகளின் கட்டிட வடிவமைப்பு, கட்டடங்கள் வடிவமைக்கப் பயன்படும் பொருட்கள் போன்றவற்றைப் பொருத்து மாடுகளுக்குத் தேவைப்படும் ஏற்ற சூழ்நிலை அமையும்
  • நன்றாக வடிவமைக்கப்படும் கால்நடைக்கொட்டகைகள் மாடுகளுக்கு வெப்பத்தால்  ஏற்படும் அயற்சியைக் குறைத்து தீவன எடுப்பை அதிகரித்து, பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்கின்றன
  • இந்தியாவில் நிலவும் பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலைகள், பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கறவை மாடுக்களுக்கேற்ற கட்டிடங்களை அமைப்பது இயலாததாகும்
  • எனவே, கறவை மாடுகளுக்கேற்ற கொட்டகைகள் கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் அமைக்கப்படுகின்றன
    • 1. திறந்த வெளி வீடமைப்பு மற்றும்
    • 2. முறையான கொட்டகை அமைப்பு

1. திறந்த வெளி வீடமைப்பு  
  • இந்த வகை வீட்டமைப்பில் சிகிச்சசையளிக்கும் மற்றும் பால் கறக்கும் நேரத்தைத் தவிர  மாடுகள் திறந்தவெளியில், நாள் முழுவதும் பராமரிக்கப்படுகின்றன
  • இம்முறையில் மாடுகளுக்கு மழை, அதிகப்படியான வெயில் மற்றம் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்க கொட்டகை அமைக்கப்படுகிறது
  • பால் கறக்கும் நேரத்தின் போது, பால் கறக்கும் கொட்டகையில் மாடுகளைக் கட்டி அவற்றுக்கு பொதுவான தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டியில் தீவனம் மற்றும் தண்ணீரை அளிக்கவேண்டும்
  • மாடுகள் பராமரிக்கப்படும் திறந்தவெளியினைச் சுற்றிலும் கம்பி வேலி அல்லது சுவர் அமைக்கப்பட்டு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன
நன்மைகள்
  • பண்ணையினை அமைக்கும் செலவு குறைவு
  • எதிர்காலத் தேவைக்கு பண்ணையினை விரிவாக்கம் செய்வது எளிது
  • இந்த முறை வளர்ப்பில் மாடுகள் சுற்றித் திரிவதால் அவற்றுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும்
  • மாடுகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்
  • எல்லா மாடுகளுக்கும் பொதுவான தீவனம் மற்றும் தண்ணீரை அளிக்கமுடியும்
  • இம்முறையில், தனியாக கொட்டகையில் வைத்து,  மாடுகளிலிருந்து பால் கறக்கப்படுவதால் சுத்தமான பால் உற்பத்தியினை பெறலாம்
  • மாடுகள் சினைப் பருவத்தினை அடைந்திருப்பதை எளிதில் கண்டறியலாம்
  • இவ் வகை பராமரிப்பில்  சாதாரணமாக மாடுகளுக்குத் தேவைப்படும் இடத்தின் அளவில் வைத்திருக்கும் மாடுகளை விட 10-15 சதவிகிதம் அதிக எண்ணிக்கையிலான மாடுகளை குறைந்த காலத்திற்கு வைத்து பராமரிக்கமுடியும்.
தீமைகள்
  • அதிக மழை பெய்யும் இடங்களிலும், அதிக பனிப்பொழிவு உள்ள இடங்களான இமயமலைப் பிரதேசங்களிலும் இந்த வகை பண்ணை அமைப்பு ஏற்றதல்ல
  • இம்மாதிரியான பண்ணை அமைப்புக்கு அதிகப்படியான இடம் தேவை
  • தீவனம் பொதுவாக அளிக்கப்படுவதால் மாடுகளுக்கிடையே தீவனத்திற்கு போட்டி ஏற்படும்
  • ஒவ்வொரு மாட்டையும் தனியாக பராமரிப்பது கடினம்
  • பால் கறக்கும் மாடுகளுக்கு தனியாக பால் கறக்கும் இடக்கும் இடம் தேவை

2. முறையான கொட்டகை அமைப்பு  
  • இந்த முறை வீடமைப்பில், மாடுகள் கொட்டகையில் கட்டி பராமரிக்கப்படுகின்றன
  • ஒரே கொட்டகையில் மாடுகளுக்குத் தீவனம் அளிக்கப்பட்டு பால் கறக்கப்படுகிறது
  • இவ்வகை கொட்டகைகளில் முழுவதும் கூரை வேயப்பட்டு, பக்கவாட்டுச் சுவர்களில் சன்னல்கள் பொருத்தப்பட்டு, போதுமான அளவு காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்குமாறு அமைக்கப்படுகிறது
  • இவ்வகை வீடமைப்பு குளிர் பிரதேசங்களுக்கும், அதிக மழை பொழியும் இடங்களுக்கும் ஏற்றது

2. கறவை மாட்டுப்பண்ணையில் தேவைப்படும் பல்வேறு கட்டிடங்கள்
கறவை மாட்டுப்பண்ணையில் கீழ்க்காணும் பல்வேறுவிதமான வடிவமைப்புகள் தேவை
    • தீவனம் கொண்டு செல்லும் பாதை
    • தீவனத்தொட்டி
    • நிற்கும் இடம்
    • கழிவுநீர் வாய்க்கால்
    • பால் கறக்கும் இடம்
    முக்கியமான கட்டிடங்கள்
    • கறவை மாட்டுக் கொட்டகை
    • பால் கறக்கும் இடம் அல்லது கொட்டகை
    • பால் கறக்கும் இடம் அல்லது கொட்டகை
    • கன்றுக் கொட்டகை
    • பால் வற்றிய மாடுகளுக்கான கொட்டகை
    • காளை மாடுகளுக்கான கொட்டகை
    • நோயுற்ற மாடுகளுக்கான கொட்டகை
    • புதிதாக வாங்கிய மாடுகளை தனியாக  பராமரிக்கத் தேவையான கொட்டகை
இதர கட்டிடங்கள்
    • சேமிப்பு அறை
    • பால் வைக்கும் அறை
    • தீவனக் கொட்டகை ( வைக்கோல் அல்லது இதர தீவனக் கொட்டகை)


முக்கியமான கட்டிடங்கள்
அ. கறவை மாட்டுக்கான கொட்டகை

கறவை மாட்டுக் கொட்டகையில் கீழ்வரும் பகுதிகள் இருக்கவேண்டும்

  • தீவனம் எடுப்பதற்கான வழி
  • தீவனத் தொட்டி
  • மாடுகள் நிற்பதற்கான இடம்
  • கழிவு நீர் வெளியேறும் வாய்க்கால்
  • பால் கறக்கும் பகுதி

பண்ணையில் பராமரிக்கப்படும் மாடுகளின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றை பராமரிக்கலாம்

ஒரு வரிசை அமைப்பு

  • இந்த வகை அமைப்பில் 12-16 மாடுகளைப் பராமரிக்க முடியும்

இரு வரிசை அமைப்பு

  • பண்ணையில் 16க்கும் மேற்பட்ட மாடுகள் இருப்பின் இந்த வகை அமைப்பில் கட்டி மாடுகளைப் பராமரிக்கலாம்
  • இரு வரிசை அமைப்பில் 50 மாடுகள் வரை ஒரு கொட்டகையில் கட்டி பராமரிக்க முடியும்
  • இரண்டு கொட்டகைகளுக்கும் இடையில் 30 அடிக்கு மேல் இடைவெளி இருக்கவேண்டும் அல்லது கட்டிடத்தின் உயரத்தில் இரண்டு மடங்கு அளவுக்கு இடைவெளி இருக்கவேண்டும்

    இரு வரிசை அமைப்பில் இரண்டு முறைகள் உள்ளன. அவையாவன

    • வால் நோக்கிய அமைப்பு  அல்லது முகப்பகுதி வெளியில் இருக்கும் அமைப்பு
    • முகம் நோக்கிய அமைப்பு அல்லது முகப்பகுதி உள்ளே நோக்கும் அமைப்பு
1. வால் நோக்கிய அமைப்பு  அல்லது முகப்பகுதி வெளியில் இருக்கும் அமைப்பு

நன்மைகள்
1. இம்முறை கொட்டகை அமைப்பினை சுத்தம் செய்வதும், மாடுகளில் பால் கறப்பதும் எளிது
2. மாடுகளில் பால் கறப்பதை மேற்பார்வையிடுவதும் இம்முறை கொட்டகை அமைப்பில் எளிது
3. இம்முறை வீட்டமைப்பில் மாடுகளுக்கிடையில் நோய்கள் பரவுவதும் குறைவு
4. மாடுகளுக்கு கொட்டகையின் வெளிப்பகுதியில் இருந்து சுகாதாரமான காற்று கிடைக்கிறது

2. முகம் நோக்கிய அமைப்பு அல்லது முகப்பகுதி உள்ளே நோக்கும் அமைப்பு
நன்மைகள்
    • மாடுகளைக் கொட்டகைக்குள் ஓட்டுவது எளிது
    • மாடுகளுக்குத் தீவனம் அளிப்பதும் எளிது
    • சூரிய ஒளி நேரடியாக இவ்வாய்க்கால்களில் விழுவதால் கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதும் எளிது
    • மாட்டுக்கொட்டகையினைப் பார்வையிடும் பார்வையாளர்கள் எளிதில் கொட்டகையினை பார்வையிடலாம்

தீமைகள்

    • மாடுகளைப் பால் கறக்கும்போது மேற்பார்வையிடுவது கடினம்
    • மாடுகளுக்கிடையே நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம்
ஆ. பால் கறக்கும் இடம்
  • பால் பண்ணையில் சுற்றிலும் மூடப்பட்ட, பால் கறப்பதற்கென்றே தனியாக உள்ள இடம் பால் கறக்கும் இடமாகும்
  • இப்பகுதி பண்ணையில் நடுவில் இருக்குமாறு அமைக்கப்பட்டு, பண்ணையின் இதர கட்டிடங்கள் இதனைச் சுற்றிலும் அமையுமாறு இருக்கவேண்டும்
  • மாடுகள் தனியாக நின்று, பால் கறப்பதற்கேற்ற வகையில், பால் கறக்கும் இடத்தில் தனித்தனி பகுதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான பால் கறக்கும் அறை போன்ற இடங்கள் பண்ணையிலுள்ள மாடுகளின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவிகிதம் இருக்கவேண்டும்
  • மாடுகளுக்கு பால் கறக்கும்போது, அவைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மொத்தமாக பால் கறக்கவேண்டும்
  • பால் கறக்குமிடத்தின் நீள அகலங்கள்
  • மாடுகள் நிற்கும் இடத்தின் நீளம் - 1.5-1.7 மீட்டர்
  • மாடுகள் நிற்கும் இடத்தின் அகலம் – 1.05 -1.2 மீட்டர் (நிற்கும் இடத்தின் நீளத்தில் 80 சதவிகிதம்)
  • நடுவிலுள்ள நடக்கும் பகுதியின் அகலம் – 1.5-1.8 மீட்டர்
  • தீவனத் தொட்டியின் அகலம் – 0.75 மீ
  • கழிவு நீர் வெளியேறும் வாய்க்காலின் அகலம் – 0.3 மீ

இ. கன்று ஈனுவதற்கான கொட்டகை  
  • கன்று ஈனும் தேதிக்கு 2-3 வாரங்களுக்கு முன்பாக சினை மாடுகளை கன்று ஈனும் கொட்டகையில் கட்டி வைத்து பராமரிக்கவேண்டும்
  • மூன்று மீட்டர் அகலமும், 4 மீட்டர் நீளத்துடன் கூடிய 12 சதுர மீட்டர் பரப்பளவில் கன்று ஈனும் நிலையிலுள்ள மாடுகளை பராமரிக்க  கொட்டகையினை அமைக்கவேண்டும்
  • பண்ணையாளரின் வீட்டிற்கு அருகில் கன்று ஈனும் கொட்டகையினை அமைப்பதால், பண்ணையாளர் மாடுகளை மேற்பார்வையிடுவது எளிதாக இருக்கும்

ஈ. கன்றுகளுக்கான கொட்டகை  
  • இளங் கன்றுகளை தனியாக பராமரிப்பதற்கு கன்று கொட்டகை அவசியமாகும்ம்
  • பால் கறக்கும் கொட்டகை அல்லது இடத்திற்கு அருகில் கன்றுக் கொட்டகை அமைக்கவேண்டும்
  • மேற்கூறியவாறு கன்றுக் கொட்டகையினை அமைப்பதால் கன்றுகளை அவற்றின் தாய் மாடுகளிடம் எளிதில் அழைத்துச் செல்ல முடியும்
  • அதிக எண்ணிக்கையிலான கன்றுகள் பண்ணையில் இருந்தால், கன்றுகளுக்கென தனியாக ஒரு பெரிய கொட்டகையினை, மாடுகளை பால் கறக்கும் இடத்தற்கு அருகில் அமைக்கவேண்டும்

உ. இளம் மாடுகள் அல்லது கிடேரிகளுக்கான கொட்டகை  
  • கிடேரிக் கன்றுகளை தனியாக பராமரிப்பதற்கு இக் கொட்டகை அவசியம்
  • ஆறு மாத வயதிற்கு மேல், இனப்பெருக்க வயதிற்குள்  உள்ள கிடேரிக் கன்றுகளை, பால் ஊட்டும் கன்றுகளிலிருந்து தனியாக பிரித்து  வளர்க்க வேண்டும்
  • அதிக எண்ணிக்கையில் இளங்கிடேரிகள் இருந்தால், அவைகளை வயதிற்கேற்றவாறு பிரித்து தனியாக வளர்க்கவேண்டும்

ஊ. பால் வற்றிய மாடுகளுக்கான கொட்டகை  
  • பெரிய பண்ணைகளில், பால் கறக்கும் மாடுகளும், பால் வற்றிய மாடுகளையும் தனியாக பராமரிக்க வேண்டும்
  • கொட்டகையின் மூடப்பட்ட பகுதியிலுள்ள தரைப்பகுதி, சிமெண்ட் கான்கிரீட்டினால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
  • நம் நாடான இந்தியாவில் இருக்கும் சிறிய பண்ணைகளில், பால் வற்றிய மாடுகளும், பால் கறக்கும் மாடுகளும் ஒன்றாக கட்டி பராமரிக்கப்படுகின்றன
  • பொதுவாக பண்ணையிலுள்ள மாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மாடுகள் பால் வற்றி சினையாகவோ அல்லது பால் வற்றிய மாடுகளாகவோ இருக்கும்

எ. காளை மாட்டுக் கொட்டகை  
  • காளை மாடுகளை தனியாக பண்ணையில் பராமரிக்க இக்கொட்டகை தேவைப்படும்
  • பண்ணையின் ஒரு கடைக்கோடியில் காளை மாட்டுக் கொட்டகை அமைக்கவேண்டும்
  • ஒவ்வொரு காளைக்கும் தனியாக கொட்டகை இருக்கவேண்டும்
  • இயற்கை முறை இனவிருத்தி அல்லது காளை மாடுகளைப் பயன்படுத்தி இனவிருத்தி செய்யும் முறையில் பண்ணையிலுள்ள ஒவ்வொரு 50 மாடுகளுக்கும் ஒரு காளை மாட்டினை வைத்திருக்கவேண்டும்
  • பண்ணையில் மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டு இனவிருத்தி செய்தால் காளைகளை பண்ணையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
  • காளை மாட்டுக் கொட்டகை 3 X 4 மீட்டர் அளவு மூடிய பகுதியுடனும் , 120 சதுர மீட்டர் திறந்த வெளியுடன் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்

ஏ. நோயுற்ற மாடுகளுக்கான கொட்டகை  
  • நோயற்ற மாடுகளிலிருந்து, நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளைத் தனியாக பிரித்து பராமரிப்பதன் மூலம் நோயற்ற மாடுகளுக்கு நோய் பரவுவதைத் தவிர்க்கலாம்
  • இந்த கொட்டகை பண்ணையின் ஒரு மூலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வதால், மற்ற பண்ணையிலுள்ள மாடுகள் இப்பகுதியில் செல்வதை தடுக்க முடியும்
ஐ. புதிதாக வாங்கிய மாடுகளை தனியாக பராமரிக்கத் தேவையான கொட்டகை  
  • பண்ணையில் நுழைவு வாயிலுக்கருகில் இந்த கொட்டகையினை அமைக்கவேண்டும்
  • புதிதாக வாங்கப்பட்ட மாடுகளை, பண்ணைக்குள் நுழையும்போது இந்த கொட்டகையில் கட்டி 30 முதல் 40 நாட்களுக்கு தனியாக கட்டி, நோய் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்
2.இதர கட்டிடங்கள்  
அ. சேமிப்பு அறை  
  • சேமிப்பு அறையின் நான்கு புறமும் மூடப்பட்டு, எலிகள் புகாதவாறு அமைக்க வேண்டும்
  • கான்கிரீட்டினால் ஆன ஒரு சேமிப்பு அறை, தீவனம் கலப்பதற்கேற்றவாறு தனியாக அமைக்கப்பட வேண்டும். மேலும் பால் கறக்கும் கொட்டகைக்கு அருகில், சிறிய தீவன சேமிப்பு அறையும் அமைக்கவேண்டும்

ஆ. பால் வைக்கும் அறை  
  • 400-700 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யும் பெரிய மாட்டுப் பண்ணைகளில், கறந்த பாலை வைப்பதற்கும், பாலை குளிர்விப்பதற்கும் 3.7  X 5 மீட்டர் அளவுடைய அறைகளும், இதற்கு மேல் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 40 லிட்டர்கள் பாலுக்கும் அதிகப்படியாக 0.37 சதுர மீட்டர் அளவு இடம் தேவைப்படும்
  • நூறு லிட்டருக்கும் குறைவாக உற்பத்தி செய்யும் சிறிய பால் பண்ணைக்கு, 3.75 X 3 மீட்டர் அளவுடைய அறை பால் வைப்பதற்கும், தீவனத்தினை  சேமித்து வைப்பதற்கும் அமைக்கவேண்டும்

இ. தீவனக் கொட்டகை  
  • வயது முதிர்ச்சியடைந்த ஒரு மாடு ஒரு நாளைக்கு 5 முதல் 10 கிலோ வரை வைக்கோல் அல்லது இதர பசும் தீவனத்தினை எடுத்துக்கொள்ளும். ஆனால் ஒரு இளங்கன்று ஒரு நாளுக்கு 2 முதல் 5 கிலோ வரை வைக்கோல் அல்லது இதர பசும் தீவனத்தினை உட்கொள்ளும்
  • இவ்வாறு மாடுகளுக்குத் தேவையான தீவனத்தின் அளவினைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு தீவனம் சேமிக்கும் அறையினை அமைக்கவேண்டும்.

பல்வேறு வகையான மாடுகளுக்குத் தேவைப்படும் இடஅளவு

கால்நடைகளின் வகை

இட அளவு

ஒரு கொட்டகையில் கட்டப்படும் அதிகப்படியான மாடுகளின் எண்ணிக்கை

கட்டிடத்தின் உயரம்

 

 

காளை மாடுகள்

12.0

24.0

1

அதிக மற்றும் மிதமான மழை பெய்யும் இடங்களில் 175 செ.மீ, மழை  குறைவாக உள்ள பகுதிகளில் 220 cm

கறவை மாடுகள்

3.5

7.0

50

எருமைகள்

4.0

8.0

50

கன்று ஈனும் மாடுகள்

12.0

12.0

1

இளங்கன்றுகள்

1.0

2.0

30

வயது முதிர்ந்த கன்றுகள்

2.0

4.0

30


கால்நடைகளுக்குத் தேவையான தீவன மற்றும் மற்றும் தண்ணீர்த் தொட்டி அளவுகள்

கால்நடைகளின்  

ஒரு கால்நடைக்குத் தேவைப்படும் இட அளவு

100 கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனத் தொட்டியின் நீளம்

100 கால்நடைகளுக்குத் தேவைப்படும் தண்ணீர்த்தொட்டியின் அளவு

மாடுகள் மற்றும் எருமைகள்

60 – 75

6000 – 7500

600 – 750

கன்றுகள்

40 – 50

4000 – 5000

400 – 500

தீவனத்தொட்டியின் நீள அகலங்கள்

கால்நடைகளின் வகை

அகலம் (செமீ)

ஆழம்(செமீ)

உட்புறச்சுவரின் உயரம் (செமீ)

வளர்ந்த மாடுகள் மற்றும் எருமைகள்

60

40

50

கன்றுகளுக்கு

40

15

20



top
   கன்றுகளுக்கான கொட்டகை
  • கன்றுக்கொட்டகைகளை வடிவமைக்கும்போதும் அவற்றிற்குத் தேவையான மருத்துவம் மற்றும் கன்றுகளின் இறப்பினைக் குறைத்து தரமான ஆரோக்கியமான கன்றுகளை பெறுவது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்
  • கன்றுகொட்டகையானது கன்றுகள் மற்றும் கன்றுக்கொட்டகையில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு வசதியாக இருக்குமாறு அமைக்கப்படவேண்டும்.
கன்றுக்கொட்டகையின் அடிப்படை அம்சங்கள்
  • உலர்வான படுக்கை அமைப்பு
  • நல்ல காற்றோட்டம்
  • கன்றுகளுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச காற்றோட்ட அளவு (கன அடிகளில்)
  • வறட்சியற்ற சூழ்நிலை
  • கன்றுகளுக்கு உலர்வான படுக்கை வசதி மிகவும் அவசியமாகும்.ஏனெனில் இந்த வசதி இருந்தால் மட்டுமே கன்றுகளுக்கு,கொட்டகையின் தரையினால் ஏற்படும் வெப்ப இழப்பு குறைவதுடன் வைக்கோலின் உபயோகமும் குறைகிறது
  • முறையாக வடிவமைக்கப்பட்ட வடிகால் வசதி மற்றும் காற்றோட்டவசதி போன்றவற்றால் கன்றுக்கொட்டகையிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் குறைக்கப்படும்
  • நல்ல காற்றோட்ட வசதி உள்ள கன்றுக்கொட்டகையில் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன் டை ஆக்சைடு  போன்ற தீயவிளைவுகளை ஏற்படுத்தும் வாயுக்களும் வெளியேற்றப்படுகின்றன
  • ஒரு கன்றுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச காற்றோட்ட அளவான ஒரு கன அடி அளவு எல்லாக் கன்று கொட்டகைகளிலும் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அமைக்கபடுவதால் நோய் ஏற்படுத்தும் கிருமிகளின் அளவை கன்றுக்கொட்டகையில் குறைப்பதுடன், இதர நோய்க்கிருமிகளின் தாக்குதலும் குறைக்கப்படுகிறது
  • கன்றுக்கொட்டகையின் உயரம் மற்றும் இட வசதி போன்ற அம்சங்கள் கன்றுக்கொட்டகையில் கன்றுகளுக்கு மேலே காற்றோட்ட வசதியினை அதிகப்படுத்தி குளிர்காலத்தில் கன்றுகளுக்கு ஏற்படும் பாதிப்பினைக் குறைக்கின்றன
  • கன்றுக்கொட்டகை ஒரே சமயத்தில் கன்றுகளை வளர்த்து பிறகு அவற்றை மற்றொரு கொட்டகைக்கு ஒரே சமயத்தில் மாற்றுமாறு அமைக்கப்படுவதால், புதிதாக கன்றுகளை கொட்டகைக்குள் கட்டவதற்கு முன்பாக  கொட்டகையினை முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்படுகிறது
  • ஒவ்வொரு முறை புதிதாக கன்றுகளை கொட்டகையில் கட்டி பராமரிப்பதற்கும், பழைய கன்றுகளை கன்றுக் கொட்டகையிலிருந்து அடுத்த கொட்டகைக்கு மாற்றுவதற்கும் உள்ள கால இடைவெளி குறைந்தது மூன்று வாரங்களாக இருக்கவேண்டும்
  • ஒரே குழுவிலுள்ள கன்றுகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் குறைவாக இருக்கவேண்டும்
  • ஒரே பண்ணையிலிருந்து  பெறப்பட்ட கன்றுகளை மட்டுமே ஒன்றாகக் கட்டி பராமரிக்கவேண்டும
கன்றுக்கொட்டகைகளின் வீடமைப்பு வகைகள்
  • கன்றுக்கொட்டகை அமைப்பில் மூன்று வகைகள் உள்ளன
  • அவையாவன
    • கறவைமாடுகளாக்க வளர்க்கப்படும் கன்றுகளுக்கும்,இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் கன்றுகளுக்குமான வீடமைப்பு
    • கன்று இறைச்சிக்காக வளர்க்கப்படும் கன்றுகளுக்கான வீடமைப்பு
    • பால் ஊட்டும் கன்றுகளுக்கான வீடமைப்பு
  •  பண்ணையில் வளர்க்கப்படும் பெரும்பாலான கன்றுகள் முதல் வகைக்காக வளர்க்கப்படுகின்றன
  • இந்த வகை  வீடமைப்பானது  சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகிறது
  • கன்றுகள் தனித்தனியான கொட்டகைகளில் வளர்ப்பதா அல்லது மொத்தமாக ஒரே கொட்டகையில் கட்டி வளர்ப்பதா என்பதற்கு பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன
  • இந்தியாவில் பொதுவாக கன்றுகள் மொத்தமாக ஒரு கொட்டகையில் கட்டியோ அல்லது தாய் மாடுகளுடன் சேர்த்து கொட்டகையில் பராமரிக்கப்படுகின்றன
  • முறையாக வடிவமைக்கப்பட்ட பண்ணைகளிலும், இந்த சூழ்நிலை வேறுபடுகிறது
  • இந்தியாவில் 30-40% இளங்கன்றுகள் இறப்பு மேற்கூறிய கட்டிட வடிவமைப்பு அமைக்கப்படும் பண்ணைகளில் ஏற்படுகிறது
  • கன்றுகளுக்கென தனியாக கொட்டகைகளை வடிவமைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் தனியாக கன்றுகளுக்கு அமைக்கப்படும் கொட்டகைகளை சுத்தம் செய்வதும்,கிருமி நீக்கம் செய்வதும் எளிதாகும்
  • ஒவ்வொரு கன்றையும் தனியாகப்பிரிக்க தனித்தனிக் கொட்டகைகள் அமைக்கப்படவேண்டும்
  • இவ்வாறு அமைப்பதால் கன்றுகள் அவற்றின் தொப்புளை நாவினால் நக்குவது குறைக்கப்படுவதுடன், இதர முறைகளின் மூலம் நோய் பரவுவதும் குறைக்கப்படுகிறது
  • ஆனால் மற்ற கொட்டகை அமைப்புகளில் கால்நடைகளுக்கு இடையேயான தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்படுகிறது
  • கன்றுகளின் ஒரு மாத வயது வரை அல்லது  அவற்றைத் தனிக் கொட்டகைகளில் கட்டி பராமரிப்பது நல்லது
  • கன்றுகளின் மூன்று மாத வயதிற்குப் பிறகு,3-5 மாத வயதான கன்றுகளை தனியாக ஒரு கொட்டகையிலும்,  6 மாத வயதிற்குப் பிறகு அவற்றின் இனப்பெருக்கவயதை அடையும் வரை தனித்தனிக் கொட்டகைகளிலும் வைத்துப் பராமரிக்கவேண்டும்
  • ஆறுமாத வயதிற்குப் பிறகு காளைக் கன்றுகள் இனப்பெருக்கத்திற்கோ அல்லது இறைச்சிக்கு வெட்டுவதற்காகவோ விற்கப்படுகின்றன
  • எளிதாக மேலாண்மை செய்வதற்கு கன்றுக் கொட்டகையானது கறவை மாட்டுக்கொட்டகைக்கு அருகிலேயே அமைக்கப்படவேண்டும்
 

பல்வேறு வயதான கன்றுகளுக்கு ஏற்ற இட வசதி

கன்றுகளின் வயது மாதங்களில்

மூடிய கொட்டகையில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இடவசதி

கொட்டகையின் திறந்த பகுதியில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இட அளவு

ஒரு கொட்டகையில் பராமரிக்ககப்படும் கன்றுகளின் எண்ணிக்கை

0-3

1.0

2

24

3-6

1.5

3

16

6-12

2.0

4

12


top
   காளை மாடுகளுக்கான கொட்டகை
  • காளைகள் ஒரு பண்ணையின் முக்கிய அம்சமாகும். ஏனெனில் கறவை மாட்டுப்பண்ணையில் உருவாக்கப்படும் கன்றுகளின் 50 சதவிகித மரபுப்பண்புகள் காளைகளிடமிருந்தே பெறப்படுகின்றன
  • வெப்பம் அதிகமுள்ள இடங்களில் முறையாக கொட்டகை அமைக்கப்படவில்லை எனில் காளை மாடுகளின் விந்து உற்பத்தித் த்திறன் பாதிக்கப்படும்
  • எனவே கறவை மாட்டுப்பண்ணையில் இனப்பபெருக்கத்திறனை அதிகரிக்க மேம்படுத்துவதற்கு காளை மாட்டுக்கொட்டகைகள் முறையாக அமைக்கப்படவேண்டும்
  • காளை மாடுகள் கொட்டகைகள் மற்றும் திறந்த வெளி அமைப்பிலும் பராமரிக்கப்படுகின்றன. காளை மாடுகள் தனித்தனிக் கொட்டகைகளில் பராமரிக்கப்படவேண்டும் அல்லது அவற்றை இரண்டு வரிசைகளாக ஒரே கொட்டகையில் கட்டியும் பராமரிக்கலாம்
காளை மாட்டுக்கொட்டகைகளின் உபயோகம்
  • பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து காளைகளைப் பாதுகாக்கவும், அவற்றை எளிதில் கையாளவும் முறையான கொட்டகை அமைப்பு அவசியமாகும்
  • காளை மாடுகளுக்கு உடற்பயிற்சிக்காக
  • கறவை மாட்டுப் பண்ணையில் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்காக
காளை மாடுகளுக்குத் தேவைப்படும் இட அளவுகள்
  • மூடிய கொட்டகையில் ஒரு காளைக்கு 12 சதுர மீட்டரும், அவற்றிற்கு உடற்பயிற்சி செய்ய -திறந்த வெளிக் கொட்டகையில் 120 சதுர மீட்டரும் இடம் தேவைப்படும்
  • காளை மாட்டுக் கொட்டகையில் திறந்த வெளி அமைப்பு இல்லாதபட்சத்தில் அதற்கென தனியாக உடற்பயிற்சி கருவியும் அமைக்கப்படவேண்டும்

காளை மாட்டுக்கொட்டகையினை வடிவமைக்கும்போது கவனிக்கப்படவேண்டிய நுணுக்கங்கள்
சுவர்
  • திறந்த வெளியுடன் அமைக்கப்பட்ட காளைக் கொட்டகையில் அதன் சுவர் 1.5 மீட்டர் உயரத்திற்கு அமைத்து அதன் மீது இரண்டு அல்லது மூன்று உருளை வடிவ இரும்பு தூண்களை நீளவாக்கில் 20-30 செமீ இடைவெளியில் பொருத்தவேண்டும்
தரை
  • காளைக் கொட்டகையின் தரை முறையாக அமைக்கப்படவேண்டும். இவ்வாறு முறையாக தரை அமைக்கப்பட்டால் மட்டுமே காளைகளின் குளம்புகளில் பாதிப்பு  ஏற்படாது
  • சொரசொரப்பான சிமெண்ட் காங்கிரீட் கொண்டு தரையை அமைக்கவேண்டும். தரையானது1/40 முதல் 1/60 அளவிற்கு சாய்வாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு சாய்வாக தரை அமைக்கப்பட்டால் கால்நடைகளின் சிறுநீர் மற்றும் சாணம் போன்ற கழிவுகள் கழிவு நீர் வாய்க்கால் மூலம் வெளியேறுவதற்கு வசதியாக இருக்கும்
  • வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் வெயில் காலத்தில் குளிராகவும், வெப்பத்தை  கடத்தாததன்மையுடையதாகவும் இருக்கவேண்டும்
  • விட்ரிஃபைட் கற்கள் மூலம் காளைக் கொட்டகையில் வழுக்காதவாறு தரை அமைக்கவேண்டும்
கூரை
  • கேபிள் அல்லது மானிட்டர் கூரையின் வெளிப்புறம்  2.5 முதல் 3 மீட்டர் நீளம் வரை வெளியே நீட்டியிருக்குமாறும், அதன் ரிட்ஜ் உயரம் 3.2 முதல் 3.5 மீட்டர் வரை இருக்குமாறும் அமைக்கவேண்டும்
  • பொதுவாக வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் காளைக்கொட்டகையில் கூரை அமைக்கப்பயன்படும் பொருட்கள் வெப்பத்தைக் கடத்தாதவண்ணமும் கதகதப்பை அளிக்கும்வண்ணமும் இருக்கவேண்டும்
  • பொதுவாக ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் அல்லது துத்தநாக முலாம் பூசப்பட்ட இரும்பு அட்டைகள்  காளை கொட்டகையின் கூரை அமைக்கப் பயன்படுகின்றன

இதர அமைப்புகள்  
தீவனத்தொட்டி
  • சிமெண்ட் காங்கிரீட்டினாலான 60செமீ அகலமும்,40 செமீ ஆழமும்,50 செமீ  உட்புறச்சுவர் உயரமும் உடைய தீவனத்தொட்டியனை காளை மாட்டுக்கொட்டகையின் உட்பகுதியில்  அமைக்கவேண்டும்
  • காளை மாடுகளின் கொட்டகையில் தீவனத்தொட்டிக்கு மேல் காளைகள் தங்களின் தலையை மட்டும் உள்ளே விட்டு  தீவனம் எடுக்கும்வகையில் உருளை வடிவ இரும்பு கம்பிகள் அமைக்கப்படவேண்டும்
தண்ணீர்த்தொட்டி
  • காளைக் கொட்டகையில் இருக்கும் தண்ணீர்த்தொட்டி 60-75 செமீ நீளத்தில் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும்
  • காளைகளுக்கு தண்ணீர் அளிக்க பொதுவாக தானியங்கி தண்ணீர்த்தொட்டி அமைப்பதே நல்லது
கதவமைப்பு
  • ஒவ்வொரு  காளைக்கொட்டகையிலும் முக்கிய கதவானது 4 அடி அகலமும், 7 அடி உயரத்துடன் இருக்கவேண்டும். கதவின் மேற்பகுதி இரண்டு உறுதியான உருளை வடிவ இரும்பு ராடுகள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அமைக்கப்படுவதால் காளைகள் திடீரென குதிப்பதை தடுக்கலாம்
  • காளைக்கொட்டகையில் தீவனம்  எடுப்பதற்காகவும், திறந்தவெளிக்கு  செல்வதற்காகவும், முக்கிய கதவுக்கு எதிர்புறத்தில் வெளியே செல்வதற்கு ஒரு வழி அமைக்கவேண்டும்
திறந்தவெளி
  • ஒவ்வொரு காளைக்கும் 120 சதுரமீட்டர் அளவிற்கு ஒரு திறந்தவெளி அமைக்கவேண்டும். இந்த திறந்தவெளியைச் சுற்றிலும் 0.3 மீட்டர் உயரத்தில் சுவரும்,சுவரின் மேற்புறத்தில் இரும்பினாலான உருளைகளும் 0.25 மீட்டர் இடைவெளியில் 1.2 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்படவேண்டும்
  • திறந்தவெளியின் ஒரு புறத்தில் 1.2 மீட்டர் அகலத்தில் கதவு அமைக்கவேண்டும். திறந்தவெளியின் தரையானது சிமெண்ட் காங்கிரீட்டினால் தரை அமைத்து அதில் கோடுகள் போட்டு சொரசொரப்பான இருக்கவேண்டும். மேலும் கொட்டகையின் தரை வடிகால் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
  • காளைக்கொட்டகையில் அமைக்கப்படும் திறந்தவெளியானது காளைகளுக்கு உடற்பயிற்சி அளிப்பதற்காகவும்,காளைகளுக்கு தனியாக இருக்கும் உணர்வை தவிர்ப்பதற்காகவும் அமைக்கப்படுகிறது
சர்வீஸ் கிரேட்
  • காளைக்கொட்டகையில் உள்ள திறந்தவெளியானது சர்வீஸ் கிரேட்டுக்கு செல்லுமாறு அமைக்கப்படவேண்டும். அங்கு ஒரு தொங்கும் கதவு  அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த கதவின் மூலம் காளை மாடுகளைப் பராமரிப்பவர்கள் எளிதாக காளைகளை சர்வீஸ் கிரேட் பகுதிக்கு ஓட்டிச்செல்ல முடியும்
  • விந்து சேகரிக்கும் திறந்தவெளிப்பகுதியும், விந்தினைப் பதப்படுத்தும் பரிசோதனைக்கூடமும் காளைக்கொட்டகைக்கு அருகில் அமைக்கப்படவேண்டும்
  • 50 மாடுகளுக்கு இனவிருத்தி செய்ய ஒரு காளை தேவைப்படும்.  செயற்கை முறை கருவூட்டல் மூலம் இனப்பெருக்கம்  செய்யப்பட்டால் காளைகளை பண்ணையில் பராமரிக்கத்  தேவையில்லை
வெயில் அதிகமாக உள்ள தட்பவெப்பநிலையிலிருந்து காளைகளைப் பாதுகாத்தல்
  • தட்பவெப்ப  நிலைக்கேற்றவாறு காளை மாடுகளின் விந்தின் தரம் மாறுபடும். வெப்பம் அதிகமுள்ள நேரங்களில் விந்தின் தரம் குறையும்
  • நல்ல காற்றோட்டமுள்ள குளிர்ந்த கொட்டகையில் காளை மாடுகளைப் பராமரிக்கவேண்டும்
  • வெயில் அதிகமுள்ள நாட்களில் 2-3 முறை தண்ணீரை காளை மாடுகளின் மீது தெளிக்கவேண்டும்
  • அதிகாலை அல்லது மாலையில் வெயில் சாய்ந்த பிறகே காளைகளை உடற்பயிற்சிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்
  • வேகமாக வளரும் மரக்கன்றுகளை காளை மாட்டுக்கொட்டகைக்கு அருகில் நடவேண்டும். இதனால் கிடைக்கும் இயற்கையான நிழல் மற்றும் காற்றோட்ட வசதியால் அதிகப்படியான வெப்பத்தின் தாக்குதல் குறைக்கப்படும்
  • காளைக்கொட்டகையின் கூரை மீது வைக்கோலை வேய்வதால் கொட்டகையின் உட்பகுதியில் வெப்பம் குறைக்கப்படும்
  • கூரையின் மேற்புறத்தில் வெளிர் நிறமுடைய அல்லது  வெள்ளை நிற பெயிண்ட் பூசுவதால் வெப்பம் கொட்டகையின் உள்ளே கடத்தப்படாமல் தடுக்கப்படும்
  • கூரையின் உட்புறத்தில் கருப்பு அல்லது அடர் நிற பெயிண்ட் அடிக்கலாம்

top